/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
/
கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
ADDED : செப் 11, 2025 11:26 PM
விழுப்புரம்: மாவட்டத்தில், கட்டுமான தொழிலாளர்களுக்கு உதவி தொகையுடன் திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்கப்படுகிறது என, தொழிலாளர் உதவி ஆணையர் மீனாட்சி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு, வேலை வாய்ப்பு பயிற்சி துறையுடன் இணைந்து, அந்தந்த மாவட்டத்தில் 7 நாட்களுக்கு திறன் மேம்பாட்டு பயற்சியளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி மெய்சன், கார்பெண்டர், கம்பி வேலை, தச்சு வேலை, மின் பணியாளர், பிளம்பர், வெல்டர், வர்ணம் பூசுதல், ஏ.சி.,மெக்கானிக், கண்ணாடி அறுத்தல், சலவை கல் ஒட்டுதல் உள்ளிட்ட, 12 தொழில்களுக்காக, தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில், 1400 கட்டுமான தொழிலாளர்களுக்கு, திண்டிவனம், மொளசூர் அரசு தொழிற் பயிற்சி மையத்தில், வரும் 15ம் தேதி இந்த பயிற்சி துவங்கும்.
இதில் பங்கேற்பவர்களுக்கு பயிற்சி சான்றிதழ், மதிய உணவு, காலை, மாலையில் சிற்றுண்டி வழங்கப்படும். பயிற்சி முடிந்ததும், 7 நாட்களுக்கான உதவித்தொகை ரூ.5600 வழங்கப்படும்.
உரிய ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பத்தை, விழுப்புரம் சாலாமேடில் உள்ள, தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் சமர்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.