/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குட்கா கடத்தலை தடுத்த எஸ்.ஐ.,க்கு கை முறிவு
/
குட்கா கடத்தலை தடுத்த எஸ்.ஐ.,க்கு கை முறிவு
ADDED : நவ 04, 2024 11:15 PM
கண்டாச்சிபுரம்; விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த மழவந்தாங்கல் கூட்ரோடு பகுதியில் குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போதைப்பொருள் தடுப்பு படை எஸ்.ஐ., சண்முகம், கண்டாச்சிபுரம் எஸ்.ஐ.,க்கள் காத்தமுத்து, சரவணன் ஆகியோர் கூட்ரோடு பகுதியில் நேற்று வாகன சோதனை செய்தனர்.
அப்போது, திருவண்ணாமலையிலிருந்து வந்த காரை போலீசார் நிறுத்தினர். அப்போது, சண்முகத்தின் மீது மோதிவிட்டு கார் வேகமாக சென்றது. இதில், சண்முகத்தின் வலது கை எலும்பு முறிந்தது.
தொடர்ந்து, அந்த காரை அடுக்கம் காப்புக்காட்டு பகுதியில் போலீசார் விரட்டி பிடித்தனர்.
காரில், 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 491 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தனர். தப்பியவர் குறித்து விசாரிக்கின்றனர்.

