/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புதிய உத்வேகத்தை அளித்துள்ளது சரஸ்வதி பள்ளி தாளாளர் முத்துசரவணன்
/
புதிய உத்வேகத்தை அளித்துள்ளது சரஸ்வதி பள்ளி தாளாளர் முத்துசரவணன்
புதிய உத்வேகத்தை அளித்துள்ளது சரஸ்வதி பள்ளி தாளாளர் முத்துசரவணன்
புதிய உத்வேகத்தை அளித்துள்ளது சரஸ்வதி பள்ளி தாளாளர் முத்துசரவணன்
ADDED : ஏப் 28, 2025 04:47 AM

விழுப்புரம்: 'தினமலர்' நாளிதழ் நடத்திய மாதிரி நீட் தேர்வு, மாணவர்களுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளதாக, விழுப்புரம் சரஸ்வதி சென்ட்ரல் சி.பி.எஸ்.இ., பள்ளி தாளாளர் முத்துசரவணன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
'தினமலர்' நாளிதழும், சரஸ்வதி சி.பி.எஸ்.இ., பள்ளியும் இணைந்து இந்த நீட் மாதிரி தேர்வு நடத்தியது பெருமையாக இருக்கிறது. அதிகளவில் கிராமப் புறங்களைக் கொண்ட விழுப்புரம் மாவட்ட மாணவர்களுக்கு, இத்தேர்வு பெரிய விழிப்புணர்வையும், அச்சத்தையும் போக்கியுள்ளது.
'தினமலர்' நாளிதழ், கல்வி தொடர்பான பல நிகழ்வுகளை நடத்தி வருகிறது. அதில் நீட் மாதிரி தேர்வு, மாணவர்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கிறது.
நீட் தேர்வுக்கு, என்னென்ன விதிமுறைகள் கடைபிடிக்கப்படுமோ, அந்த விதிமுறைகள், பாதுகாப்பு நெறிமுறைகள் அனைத்தையும் தவறாமல் கடைபிடித்து, மாணவர்களுக்கு ஒரு முன்னேற்பாடான அனுபவத்தை இத்தேர்வு வழங்கியுள்ளது.
இந்த தேர்வு, ஒரு முன்னோட்டமாக அமைந்து, மாணவர்களுக்கு தேர்வு குறித்த அச்சத்தை போக்கியுள்ளது.
நீட் தேர்வை யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்ற தன்னம்பிக்கையும், ஊக்கத்தையும் தந்துள்ளது. இது பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ஏராளமான பெற்றோர்களுக்கு இந்த மாதிரி தேர்வு மூலம் மன அழுத்தம் குறைந்துள்ளது.
அனைத்து விதிகளையும் பின்பற்றி, அசல் நீட் தேர்வு போல் நடத்தப்பட்டுள்ளதால், மாணவர்கள் நன்கு தெளிவு பெற்றுள்ளனர்.
இவ்வாறு முத்து சரவணன் கூறினார்.

