/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஏழுசெம்பொன் ஊராட்சியை கஞ்சனுார் ஒன்றியத்தில் சேர்க்க பொதுமக்கள் மனு

ADDED : டிச 17, 2025 07:00 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த ஏழுசெம்பொன் ஊராட்சியை புதிதாக உருவாக்கப்பட்ட கஞ்சனுார் ஒன்றியத்தில் சேர்க்க வேண்டும் என பொதுமக்கள் அன்னியூர் சிவா எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை மனு அளித்தனர்.
ஏழுசெம்பொன் ஊராட்சி தலைவர் கணபதி தலைமையில் கிராம மக்கள் அளித்த மனு:
ஏழுசெம்பொன் கிராமத்திலிருந்து 3 கி.மீ., தொலைவில் கஞ்சனூர் உள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட கஞ்சனுார் ஒன்றியத்தில் கிராமத்தை இணைத்தால் எங்கள் கிராம மக்கள் வேளாண்மை அலுவலகத்திற்கு சென்று விதைகள், விவசாய கருவிகள் உள்ளிட்டவைகளை எளிதாக கொண்டு வர முடியும். எனவே, பொதுமக்கள் நலன் கருதி காணை ஒன்றியத்திலிருந்து பிரித்து ஏழுசெம்பொன் கிராமத்தை கஞ்சனூர் ஒன்றியத்தில் இணைக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா அவசியம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.