/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஏரியில் மண் எடுக்க எதிர்ப்பு: லாரிகள் சிறை பிடிப்பு திண்டிவனம் அருகே பரபரப்பு
/
ஏரியில் மண் எடுக்க எதிர்ப்பு: லாரிகள் சிறை பிடிப்பு திண்டிவனம் அருகே பரபரப்பு
ஏரியில் மண் எடுக்க எதிர்ப்பு: லாரிகள் சிறை பிடிப்பு திண்டிவனம் அருகே பரபரப்பு
ஏரியில் மண் எடுக்க எதிர்ப்பு: லாரிகள் சிறை பிடிப்பு திண்டிவனம் அருகே பரபரப்பு
ADDED : செப் 10, 2025 11:11 PM

திண்டிவனம்: திண்டிவனம் அருகே ஏரியில் அளவிற்கு அதிகமாக மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து லாரிகள் சிறை பிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலம் சட்டசபை தொகுதி, வேம்பூண்டி கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில், நேற்று காலை 10:00 மணியளவில் 4 லாரிகள் மற்றும் ஜே.சி.பி.வாகனங்கள் மண் எடுப்பதற்காக வந்தன. அப்போது கிராம மக்கள் திரண்டு வந்து, லாரிகளை சிறைபிடித்தனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'வழக்கமாக விவசாயிகள் பயன்பாட்டிற்கு வண்டல் மண் டிராக்டர் மூலம் எடுப்பதற்கு மட்டுமே பொதுப்பணித்துறையினர் அனுமதி கொடுக்கின்றனர். ஆனால் அதிக அளவில் வாகனங்களை கொண்டு ஏரியில் மண் எடுக்க அனுமதி இல்லை. மண் எடுப்பவர்களை கேட்டால் நாங்கள் அனுமதி கொடுத்ததால் தான் மண் எடுக்கிறோம்,' என்றனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வெள்ளிமேடுப்பேட்டை போலீசார் வந்து மக்கள் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் மக்கள் சமாதானம் அடையவில்லை.
தொடர்ந்து ரோஷணை இன்ஸ்பெக்டர் தரணேஸ்வரி, வருவாய் துறை அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, அனுமதி கொடுக்கப்பட்ட இடம் குறித்து, தாசில்தார் முன்னிலையில் ஆய்வு செய்த பிறகு, மண் எடுக்கலாம் என்று கூறினர். இதையடுத்து, மாலை 4:00 மணியளவில் சிறைபிடித்து வைக்கப்பட்ட லாரிகள் மற்றும் ஜே.சி.பி.,இயந்திரங்கள் விடுவிக்கப்பட்டன.