/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அஞ்சல் துறை திட்டங்கள் சிறப்பு மேளா நிகழ்ச்சி
/
அஞ்சல் துறை திட்டங்கள் சிறப்பு மேளா நிகழ்ச்சி
ADDED : டிச 27, 2025 05:55 AM

விழுப்புரம்: விழுப்புரம் அஞ்சலக உட்கோட்டம் சார்பில் அஞ்சலக கணக்குகள் மற்றும் ஆயுள் காப்பீடு சேகரிக்கும் சிறப்பு மேளா நடந்தது.
விழுப்புரம் அடுத்த முட்டத்தூர் கிராமத்தில் நடந்த மேளாவிற்கு, புதுச்சேரி அஞ்சல் கோட்டத்தின் முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கமால் பாட்சா தலைமை தாங்கினார். விழுப்புரம் அஞ்சலக உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் ஆனந்த் யுவராஜ் வரவேற்றார்.
அஞ்சல் துறை சென்னை மண்டல துணை இயக்குனர் பாபு, புதுச்சேரி அஞ்சல் கோட்ட துணை கண்காணிப்பாளர் பிரபு சங்கர் அஞ்சல் துறையின் சிறப்பு சேவை திட்டங்களை விளக்கி பேசினர்.
சென்னை மண்டல அஞ்சல் துறை இயக்குநர் மேஜர் மனோஜ் அஞ்சல் துறையின் சிறப்பு சேமிப்பு திட்டங்கள், பொது மக்களுக்கு பன் மடங்கு கிடைக்கும் பலன்கள் குறித்தும், சேமிப்பின் முக்கியம் குறித்தும் விளக்கினார்.
தொடர்ந்து, 'செல்வமகள் சேமிப்பு கணக்குகள் மற்றும் பொன் மகன் பொது வைப்பு நிதி கணக்குகள்' துவக்கிய, குழந்தைகளுக்கு பாஸ் புத்தகங்களை வழங்கினார்.

