/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காந்தியார் திடலில் அரசியல் கட்சிகள் கூட்டம் :திண்டிவனத்தில் வியாபாரிகள் கடும் அவதி
/
காந்தியார் திடலில் அரசியல் கட்சிகள் கூட்டம் :திண்டிவனத்தில் வியாபாரிகள் கடும் அவதி
காந்தியார் திடலில் அரசியல் கட்சிகள் கூட்டம் :திண்டிவனத்தில் வியாபாரிகள் கடும் அவதி
காந்தியார் திடலில் அரசியல் கட்சிகள் கூட்டம் :திண்டிவனத்தில் வியாபாரிகள் கடும் அவதி
ADDED : டிச 16, 2025 05:17 AM

திண்டிவனத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் நடத்தும் போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள், நினைவு நாள் நிகழ்ச்சி என அனைத்தையும் நகரின் மையப்பகுதியில் உள்ள காந்தியார் திடலில் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
காந்தியார் திடலில் பொதுக்கூட்டம் என்றால், அங்குள்ள சாலையை மறைத்து மேடை அமைக்கின்றனர். இதுமட்டுமல்லாமல் மேடையைச் சுற்றி கட்சி நிர்வாகிகள் அங்குள்ள வர்த்தக நிறுவனங்களை மறைத்து பேனர்கள் வைக்கின்றனர்.
விழா துவங்குவதற்கு முன்னரே ஒலிபெருக்கியை அலற விடுகின்றனர். கூட்டம் நடக்கும் திடல் வழியாக திண்டிவனம் பஸ் நிலையத்திலிருந்து செஞ்சி மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்கள், வாகனங்களும் செஞ்சிரோடு மார்க்கமாக செல்வது வழக்கம். காந்தியார் திடலில் கூட்டம் என்றால் காந்தி சிலை எதிரே உள்ள மெயின்ரோடு வழியாக எதிரும், புதிருமாக வாகனங்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. காந்தியார் திடலில் கூட்டம் நடக்கிறது என்றால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
காந்தியார் திடலில் கூட்டம் நடத்தக்கூடாது என்ற உத்தரவு இருந்தும், போலீசார் எப்படி அரசியல் கட்சிகளுக்கு அனுமதி கொடுக்கின்றனர் என தெரியவில்லை.
அரசியல் கட்சிகள் அனைத்தும் காந்தியார் திடல் அருகே போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வ.உ.சி.திடலில் நடத்த வேண்டும் என்ற உத்தரவை எந்த அரசியல் கட்சியினரும் பின்பற்றுவதில்லை.
வருங்காலத்திலாவது, திண்டிவனம் டவுன் போலீசார் காந்தியார் திடலில் எந்த அரசியல் கட்சியினருக்கும் பொதுக்கூட்டம், போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி கொடுப்பது சரியா என்று யோசித்து முடிவு எடுக்க வேண்டும்.

