/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோட்டப்பூண்டியில் பஸ்கள் நிற்காததால் மக்கள் தவிப்பு
/
கோட்டப்பூண்டியில் பஸ்கள் நிற்காததால் மக்கள் தவிப்பு
கோட்டப்பூண்டியில் பஸ்கள் நிற்காததால் மக்கள் தவிப்பு
கோட்டப்பூண்டியில் பஸ்கள் நிற்காததால் மக்கள் தவிப்பு
ADDED : நவ 12, 2024 06:25 AM

விழுப்புரம்: கோட்டப்பூண்டி கிராமத்தில் பஸ்கள் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
செஞ்சி அடுத்த கோட்டப்பூண்டி மக்கள் அளித்த மனு:
கோட்டப்பூண்டி கிராமத்திலிருந்து, தினசரி மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் அதிகளவில், திருவண்ணாமலை, சேத்துப்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட நகரங்களுக்குச் சென்று வருகின்றனர்.
இதற்காக, மேல்செவலாம்பாடி வழியாகச் செல்லும் அரசு டவுன் பஸ்கள், எங்கள் கிராமத்தில் நின்று, பயணிகளை ஏற்றிசெல்வது வழக்கம்.
ஆனால், சில நாட்களாக, எங்கள் ஊரில் பஸ் நிறுத்தம் இருந்தும், அரசு பஸ்கள் நிற்பதில்லை. இதனால் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிக்குச் செல்பவர்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
கலெக்டர் ஆய்வு செய்து, எங்கள் ஊரில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

