/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மகளிர் கல்லுாரியில் தேசிய கருத்தரங்கு
/
மகளிர் கல்லுாரியில் தேசிய கருத்தரங்கு
ADDED : டிச 24, 2025 06:47 AM

விழுப்புரம்: விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் மனங்களை குணப்படுத்துதல் குறித்த ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் நடந்தது.
முதுகலை மற்றும் உளவியல் துறை சார்பில் நடந்த கருத்தரங்கிற்கு, இ.எஸ்.எஸ்.கே., கல்வி நிறுவனங்களின் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். முதல்வர் கலைமதி முன்னிலை வகித்தார். உளவியல் துறை உதவி பேராசிரியர் பரணி வரவேற்றார்.
முதல் அமர்வில், புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லுாரி மனநல மருத்துவ துறை பேராசிரியர் ஆவுடையப்பன், சி.பி.டி.,யின் கோட்பாடு அடிப்படைகள், சிந்தனை மறுசீரமைப்பு நுட்பங்கள் மற்றும் கவலை, மனச்சோர்வு, மனஅழுத்தம் ஆகிய பிரச்னைகளுக்கு அதன் நடைமுறை பயன்பாடுகள் பற்றி விளக்கினார்.
இரண்டாவது அமர்வில், கோவையைச் சேர்ந்த உளவியலாளர் சந்திரமோகன், டி.பி.டி., முறையின் முக்கியத்துவம், தேர்வின் பயம், உணர்ச்சி கட்டுப்பாட்டின்மை, பாண்டமிக் பிந்தைய காலத்தில் ஏற்படும் நெருக்கடி நிலைகளை நிர்வகிப்பதில் டி.பி.டி., எப்படி உதவுகிறது பற்றி கூறினார்.
பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 184 மாணவர்களும், தொழில் முனைவோரும் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. உதவி பேராசிரியர் விஷ்ணுப்பிரியா நன்றி கூறினார்.

