ADDED : டிச 30, 2025 04:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை: மேல்மலையனுாரில் ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.
பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஒன்றிய சேர்மன் கண்மணி தலைமை தாங்கினார். பி.டிஓ.,க்கள் ஜெய்சங்கர், ஏகாம்பரம் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மாதாந்திர வரவு, செலவு கணக்குகள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
துணை சேர்மன் விஜயலட்சுமி முருகன், மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி, செல்வி ராமசரவணன், கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், ஷாகின் அர்ஷத், துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

