/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
/
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : செப் 12, 2025 04:02 AM

செஞ்சி: மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
செஞ்சி அடுத்த பொற்குணம் மகா மாரியம்மன், விநாயகர், முருகர், கங்கையம்மன், பொன்னியம்மன் கோவில் திருப்பணிகள் செய்து புதிதாக மகா மண்டபம், திருசுற்று மதில் எழுப்பி மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
இதை முன்னிட்டு கடந்த, 9ம் தேதி காலை 10:30 மணிக்கு கணபதி ஹோமம், மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கலச பூஜை, முதல் கால யாக சாலை பூஜை நடந்தது.
கடந்த, 10ம் தேதி இரவு 9:00 மணிக்கு அஷ்டபந்தனம் சாற்றி சாமி பிரதிஷ்டையும், கண் திறத்தல் நிகழ்ச்சியும் நடந்தது.
நேற்று காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால ஹோமம், கோபூஜை, மூலமந்திர ஹோமம், தத்துவார்ச்சனை நாடி சந்தானம் நடந்தது.
காலை 8:30 மணிக்கு தம்பதி பூஜை, 9:40 மணிக்கு மகா பூர்ணாஹூதி, கடம் புறப்பாடு, காலை10:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகாமாரியம்மன், கங்கையம்மன், பொன்னியம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்தனர்.