
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் பூந்தோட்டம், ரங்காநாதன் சாலை சித்தி விநாயகர் கோவில் ஸ்ரீ மணிகண்ட ஐயப்பன் சன்னதியில் மண்டல பூஜை நேற்று நடந்தது.
அதனையொட்டி நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு மூலவர் மணிகண்ட ஐயப்பன் சுவாமிக்கு சிறப்பு திரவிய அபிஷேகமும், படி பூஜையும், தீபாராதனையும் நடந்தது. மதியம் 12:30 மணிக்கு அன்னதானம் நடந்தது.
மாலை 6:00 மணிக்கு ஐயப்ப பக்தர்கள் குழுவினரின் பஜனை நடந்தது. மணிகண்ட ஐயப்பன் மலர் அலங்காரம் செய்யப்பட்டு, இரவு 8:00 மணிக்கு மகா தீபாராதனையும், அன்னதானமும் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

