/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பி.எப்., நிதியில் ரூ.8 கோடி கையாடல் செய்தவர் கைது
/
பி.எப்., நிதியில் ரூ.8 கோடி கையாடல் செய்தவர் கைது
ADDED : அக் 10, 2024 02:10 AM

விழுப்புரம்:விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கான சேமநல நிதியில் கையாடல் நடந்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து, நகராட்சி தணிக்கை அலுவலர்கள், கடந்த இரு நாட்களாக, விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் முகாமிட்டு கோப்புகள், ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
அதில், கடந்த 2021ம் ஆண்டு முதல் தற்போது வரை, நகராட்சி ஊழியர்களின் குடும்ப சேமநல நிதியில், 8. கோடி ரூபாய் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது.
இந்த பணத்தை, நகராட்சியில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் வினித், 24, என்பவர் கையாடல் செய்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இவருக்கு உடந்தையாக, வினித்தின் நிறுவன ஊழியர் அஜித்குமார், உறவினர் வளர்மதி ஆகியோர் இருந்ததும் தெரிந்தது.
அதையடுத்து, வினித், வளர்மதி, அஜித்குமார் மீது வழக்குப் பதிந்து, வினித்தை போலீசார் கைது செய்தனர். கையாடல் செய்த பணம் வாயிலாக வாங்கிய கார்கள், டாடா ஏஸ் வாகனம் மற்றும் நிலம், சொத்து தொடர்பான ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட வினித், விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., பாசறை இணை செயலராக உள்ளார்.

