/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விதவைச் சான்றிதழ் இல்லாததால் பறிபோன பணி: கலெக்டரிடம் மனு
/
விதவைச் சான்றிதழ் இல்லாததால் பறிபோன பணி: கலெக்டரிடம் மனு
விதவைச் சான்றிதழ் இல்லாததால் பறிபோன பணி: கலெக்டரிடம் மனு
விதவைச் சான்றிதழ் இல்லாததால் பறிபோன பணி: கலெக்டரிடம் மனு
ADDED : பிப் 21, 2024 08:15 AM

விழுப்புரம் : அரசு பணிக்கு முன்னுரிமை பெற ஆதரவற்ற விதவைச் சான்றிதழ் வழங்கக் கோரி, பெண் தனது பிள்ளைகளோடு விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
கெடார், குளக்கரை தெருவைச் சேர்ந்தவர் அங்கப்பன் மனைவி பிரியங்கா, 29; இவர், தனது இரு பிள்ளைகளோடு வந்து, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:
வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் எனக்கு திருமணமாகி காவிய தர்ஷிணி, 11; என்ற மகளும், லிங்கேஸ்வரன், 9; மகனும் உள்ளனர். என் கணவர் அங்கப்பன் கடந்த 2020ம் ஆண்டு மாரடைப்பில் இறந்தார்.
நான் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றதன் பேரில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடந்த போலீஸ் தேர்வில் தேர்வானேன். சான்றிதழ் சரிபார்ப்பு பணியின் போது, ஆதரவற்ற விதவைச் சான்றிதழ் கேட்டனர். அது என்னிடம் இல்லாத காரணத்தால் தகுதி நீக்கம் செய்தனர். எனக்கு ஆதரவு யாருமில்லாததால் பிள்ளைகளை வைத்து கொண்டு கஷ்டப்படுகிறேன். தமிழக அரசு பணியில் முன்னுரிமை பெறுவதற்காக, ஆதரவற்ற விதவைச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

