
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் 10ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடந்தது.
இதையொட்டி நேற்று காலை 9:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கட்ரமணருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. 10:00 மணிக்கு உற்சவர் வெங்கட்ரமணனர்.
கொலு மண்டபத்தில் எழுந்தருளினார். 1500க்கும் மேற்பட்ட பெண்கள் குத்து விளக்கேற்றி சிறப்பு பூஜை செய்தனர்.
ஸ்ரீரங்க பூபதி கல்வி நிறுவன தாளாளர் ரங்கபூபதி பூஜையை துவக்கி வைத்தார். விழா ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வைகை தமிழ் முன்னிலை வகித்தார்.
ரங்கபூபதி கல்லுாரி இயக்குநர்கள் சாந்திபூபதி, சரண்யா ஸ்ரீபதி, வழக்கறிஞர் ஆத்மலிங்கம் மற்றும் விழா குழுவினர் பங்கேற்றனர்.

