/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பக்தர்களுக்கு வழங்க லட்டு தயார்
/
பக்தர்களுக்கு வழங்க லட்டு தயார்
ADDED : டிச 30, 2025 05:11 AM

விழுப்புரம்: விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதற்காக 1 லட்சத்து 8 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி நடந்தது.
வைகுண்ட ஏகாதசியை யொட்டி, விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் வரும் இன்று அதிகாலை 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இங்கு, சுவாமியை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகிகள் மூலம் பிரசாதமாக லட்டு வழங்குவது வழக்கம். இதையொட்டி, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க 1 லட்சத்து 8 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணிகள் சி.ஆர்., ஜோதி லட்டு கமிட்டி சார்பில் 36வது ஆண்டாக விழுப்புரத்தில் நடந்தது. லட்டு தயாரிப்பு பணிகளில் லட்டு கமிட்டி உறுப்பினர்கள் ஜீவா, ராஜா, வீரமணி, கருணா, சங்கர், கோவிந்தன், செல்வம், அரிகரசுதன் ஆகியோர் ஈடுபட்டனர்.

