/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஜாக்டோ - ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்த ஆயத்த மாநாடு
/
ஜாக்டோ - ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்த ஆயத்த மாநாடு
ஜாக்டோ - ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்த ஆயத்த மாநாடு
ஜாக்டோ - ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்த ஆயத்த மாநாடு
ADDED : டிச 29, 2025 06:03 AM

விழுப்புரம்: ஜாக்டோ - ஜியோ விழுப்புரம் மாவட்டம் சார்பில், காலவரையற்ற வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடந்தது.
விழுப்புரத்தில் நடந்த மாநாட்டிற்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செல்வகுமார், தண்டபாணி, டேவிட் குணசீலன் தலைமை தாங்கினர். மாவட்ட நீதி காப்பாளர் தண்டபாணி வரவேற்றார். மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் சிவராமன் துவக்க உரையாற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் தாஸ் சிறப்புரையாற்றினார். மாநில உ யர்மட்டக்குழு உறுப்பினர் சுந்தரமூர்த்தி கோரி க்கை விளக்கவுரையாற்றினார்.
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் இளங்கோபிரபு, இந்திய தொழிற்சங்க மையம் மாவட்ட செயலாளர் மூர்த்தி ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் சங்கரலிங்கம் நிறைவுரை ஆற்றினார் .
மாநாட்டில், பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவை தொகை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனே வழங்கிட வேண் டும்.
சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை முறைபடுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி வரும் ஜனவரி 6ம் தேதி முதல் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் மாவட்ட தலைநகரில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதற்கு தயாராகும் பணிகள் தொடர்பாக மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட பொருளாளர் சாருமதி நன்றி கூறினார்.

