/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனத்தில் குட்கா, கஞ்சா விற்பனை ஜோர் பொதுமக்களுக்கு தெரிகிறது; போலீசுக்கு தெரியவில்லை

ADDED : மார் 12, 2024 05:24 AM
தமிழகத்தில் அதிகரித்துள்ள புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் குட்கா உட்பட 391 வகையான புகையிலை சார்ந்த பொருட்களை விற்றால், கடைகளுக்கு நிரந்தரமாக சீல் வைக்கப்படும் என்று கடந்த ஜனவரியில் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
புதிய உத்தரவின் பேரில் முதன் முறையாக விற்றால் 5,000 ரூபாய், இரண்டாவது முறை 10 ஆயிரம் ரூபாய், மூன்றாவது முறை 25 ஆயிரம் ரூபாய் மற்றும் கடைகளுக்கு சீல் வைப்பது என அறிவிக்கப்பட்டது.
இந்த சட்டங்கள் அனைத்தும் திண்டிவனம் மற்றும் சுற்றுப்புறங்களில் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. இதனால் திண்டிவனம் நகர பகுதியில் பெரும்பாலான பங்க் கடைகளில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் போலீசாரின் அச்சுறுத்தல் இல்லாமல் தடையின்றி சர்வ சாதாரணமாக விற்பனை செய்யப்படுகிறது.
பல கடைகளில், இங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை இல்லை என்று போர்டு வைத்திருந்தும், அந்த கடைகளில் தடையில்லாமல் விற்பனை நடக்கிறது.
திண்டிவனம் நகர பகுதி கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது என சாதரண பொதுக்களுக்கு கூட நன்கு தெரிகிறது. ஆனால் விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது உள்ளூர் போலீசார் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் ஏதற்காக மவுனம் காத்து வருகின்றனர்.
முன்பு செய்தது போல் விழுப்புரம் எஸ்.பி., தீபக் சிவாச், போலீஸ் தனிப்படையினரை திண்டிவனம் பகுதிக்கு அனுப்பி, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்களின் வேண்டுகோளாக உள்ளது.