/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வனமும், வாழ்வும் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
வனமும், வாழ்வும் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : டிச 20, 2025 06:54 AM
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத்துறை, பள்ளி கல்வித் துறை சார்பில் வனமும், வாழ்வும் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கி வனவிலங்குகள், வனம் சார்ந்த புத்தகங்கள், பயிற்சி கையேடுகளை மாணவர்களுக்கு வழங்கினார்.
வனமும், வாழ்வும் ஒருங்கிணைப்பாளர் தேவராசன் மாணவர்களுக்கு வனங்கள், விலங்குகள் அவற்றின் நன்மைகள், தேவைகள் குறித்து பேசினார்.
மாவட்ட அளவில் 11ம் வகுப்பு பயிலும் 25 பள்ளிகளில் தலா 20 மாணவர்களை மட்டும் இந்த திட்டத்தில் தேர்வு செய்யபட்டு, சிறப்பு பயிற்சிகளை அந்தந்த பள்ளிகளில் வழங்கப் படுகிறது.

