/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணி துவக்கம்

ADDED : டிச 13, 2025 05:42 AM
விழுப்புரம்: விழுப்புத்தில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர சேமிப்பு கிடங்கில் உள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணி நேற்று முதல் துவங்கியது.
விழுப்புரம் மாவட்ட தேர்தல் அலுவலர் ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமை தாங்கி, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கை திறந்து வைத்து கூறுகையில், 'வரும் 2026ம் ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பெல் நிறுவன பொறியாளர்கள் மூலம் முதல் கட்ட பரிசோதனை பணி நடைபெற உள்ளது' என்றார்.
டி.ஆர்.ஓ., அரிதாஸ், தேசிய நெடுஞ்சாலை டி.ஆர்.ஓ., அம்பாயிரநாதன், உதவி கலெக்டர் (பயிற்சி) வெங்கடேஷ்வரன் மற்றும் அனைத்து அங்கீகரிப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.