/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விதை நெல் இருப்பு வைத்து வழங்க வேண்டும்; குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

ADDED : செப் 09, 2025 11:54 PM

விழுப்புரம்; விழுப்புரம் மருதுார் மற்றும் பொன்னேரிகளில் சாராய ஆலை மற்றும் ஓட்டல் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து பேசினர்.
விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமை தாங்கி, விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
தென்பெண்ணை ஆறு மற்றும் பம்பை ஆற்றில் புயலின்போது உடைந்த கரைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். வி.மாத்துார் தடுப்பணையில் இருந்து செல்லும் வரத்து வாய்க்காலை சீரமைக்க வேண்டும். எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டில் இருந்து வரும் ஆழங்கால், கண்டம்பாக்கம், மரகதபுரம் வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும். தளவானுார் அணைக்கட்டு பகுதியில் உடைந்த கரை சீரமைக்காமல் உள்ளது.
இதனால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் வந்தால், கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். உடைப்பை சீரமைக்க வேண்டும்.
பொதுப்பணித்துறையில் எந்தவொரு பணியும் நடக்கவில்லை. ஏரிகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும். விழுப்புரம் மருதுார் மற்றும் பொன்னேரிகளில் சாராய ஆலை மற்றும் ஓட்டல் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.
இது குறித்து பல முறை நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விதை நெல் தட்டுப்பாடின்றி இருப்பு வைத்து வழங்க வேண்டும்.
முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்காமல் உள்ளதை விரைந்து வழங்க வேண்டும். சம்பா பயிர்களுக்கு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு விரைந்து காப்பீட்டு தொகை வழங்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் தங்கள் கோரிக்கை குறித்து பேசினார்.
இதற்கு பதிலளித்து பேசிய ஆர்.டி.ஓ., முருகேசன், விவசாயிகளின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அப்போது, அனைத்துறை அதிகாரிகள் மற்றும் விழுப்புரம், விக்கிரவாண்டி, கண்டாச்சிபுரம், திருவெண்ணெய்நல்லுார், வானுார் தாலுகா விவசாயிகள் பங்கேற்றனர்.