/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பஸ் இயக்கும்போது மொபைல் போன் கூடாது: டிரைவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும்

ADDED : டிச 31, 2025 03:01 AM
விழுப்புரம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக டிரைவர்கள் பஸ்சை இயக்கும் போது மொபைல் ரபோன் வைத்திருந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் பணிமனை செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகத்தில் டிரைவர்கள் பஸ் இயக்கத்தின் போது கவனக்குறைவு ஏற்பட்டு விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க, டிரைவர்கள் பஸ் இயக்கும் போது தங்களின் மொபைல், ப்ளூடூத், ெஹட்செட் ஆகிய சாதனங்களை கண்டிப்பாக வைத்திருக்க கூடாது என முன்பே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருந்த போதிலும், சில டிரைவர்கள் இந்த கருவிகளை பஸ் இயக்கும் போது பயன்படுத்துவது கண்டறியப்பட்டு, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது.
டிரைவர்கள் பஸ்களை இயக்கும் போது மொபைல், ப்ளூடூத், ெஹட்செட் ஆகியவற்றை கண்டக்டரிடம் ஒப்படைக்க வேண்டும்.
தவறும் பட்சத்தில் டிரைவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த உத்தரவை பரிசோதகர்கள், நேரக்காப்பாளர்கள் டிரைவர்கள் பின்பற்றுவதை உறுதி செய்திட வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.