ADDED : டிச 29, 2025 06:02 AM

விழுப்புரம்: விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், கண்டமங்கலம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட வடவாம்பலம் கிராமத்தில் 'என் ஓட்டுச்சாவடி; வெற்றி ஓட்டுச்சாவடி' பரப்பு ரை கூட்டம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., பேசுகையில், 'சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் தான் உள்ளது.
தமிழக அரசின் சாதனை திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி, ஓட்டு சேகரிக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்ககளை கண்டறிந்து, உடனடியாக பெயர்களை சேர்க்க விண்ணப்பங்களை பெற்று, ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் வழங்க வேண்டும்' என்றார். தொடர்ந்து வடவாம்பலத்தில் வீடு, வீடாகச் சென்று, பொதுமக்களிடம், தி.மு.க., அரசின் சாதனை திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
நிர்வாகிகள் அசோக்குமார், தங்கபாலு, அன்பழகன், ஞானபிரகாஷ், கிருஷ்ணன், குணசேகர், கோவிந்தன், சரவணன், முருகன், மோகன், உதயகுமார், லிங்கேஸ்வரி ஜவகர், திவ்யா உள்பட பலர் பங்கேற்றனர்.

