/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சி, வல்லத்தில் தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
/
செஞ்சி, வல்லத்தில் தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
செஞ்சி, வல்லத்தில் தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
செஞ்சி, வல்லத்தில் தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 25, 2025 06:38 AM

செஞ்சி: செஞ்சி மற்றும் வல்லத்தில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
100 நாள் வேலை திட்டத்தில் மாற்றம் செய்துள்ள மத்திய அரசையும், அதற்கு ஆதரவாக செயல்படும் அ.தி.மு.க.,வையும் கண்டித்து நேற்று செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார் வரவேற்றார்.
பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி, காங்., மாநில துணை தலைவர் ரங்கபூபதி, முன்னாள் எம்.எல்.ஏ., செந்தமிழ் செல்வன், ம.தி.மு.க., மாநில இணை செயலாளர் மணி, தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் விஜயராகவன், பச்சையப்பன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
வல்லம் வல்லத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தீர்மானக்குழு உறுப்பினர் சிவா தலைமை தாங்கினார். மாவட்ட அவை தலைவர் சேகர், ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, துரை, இளம்வழுதி, நிர்வாகிகள் தமிழரசன், கார்வண்ணன் மற்றும் நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

