/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நீதிமன்றம் உத்தரவிட்டும் வனத்துறை 15 ஆண்டுகளாக... மெத்தனம்! போராடி வரும் வழுக்காம்பாறை ஏரி பாசன விவசாயிகள்
/
நீதிமன்றம் உத்தரவிட்டும் வனத்துறை 15 ஆண்டுகளாக... மெத்தனம்! போராடி வரும் வழுக்காம்பாறை ஏரி பாசன விவசாயிகள்
நீதிமன்றம் உத்தரவிட்டும் வனத்துறை 15 ஆண்டுகளாக... மெத்தனம்! போராடி வரும் வழுக்காம்பாறை ஏரி பாசன விவசாயிகள்
நீதிமன்றம் உத்தரவிட்டும் வனத்துறை 15 ஆண்டுகளாக... மெத்தனம்! போராடி வரும் வழுக்காம்பாறை ஏரி பாசன விவசாயிகள்
ADDED : டிச 23, 2025 06:13 AM

செஞ்சி ராஜாகிரி கோட்டை பின்புறம், தென் மேற்கு பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான காட்டுப்பகுதியில் வழுக்கம்பாறை ஏரி உள்ளது. மன்னர்கள் காலத்தில் கோட்டையின் பாதுகாப்பிற்காகவும், பாசனத்திற்காகவும் ஏற்படுத்தப்பட்ட இந்த ஏரியில் இருந்து 200 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன.
வழக்காம்பாறை ஏரியைச் சுற்றி முட்டுக்காடு, சோமசமுத்திரம், வடகால் காட்டுப்பகுதியும், ஏராளமான மலை குற்றுகளும் இருப்பதால் மழைக்காலம் துவங்கியதும் ஏரி நிரம்பி விடும். அதன் பிறகு ஏரியில் இருந்து பல மாதங்கள் வெளியேறும் உபரி நீர் அடுத்தடுத்து வனத்துறை தாங்கல் ஏரி, மங்களாவரம் தேவரடியார் ஏரி, வேலாகுளம் ஏரி, சிறுகடம்பூர் ஏரிக்கு தண்ணீர் செல்லும்.
செஞ்சி நகரத்தையொட்டியுள்ள இந்த ஏரிகள் நிரம்பினால் விவசாய கிணறுகளின் நீர்மட்டம் ஆண்டு முழுவதும் குறையாமல் இருக்கும். செஞ்சி நகரின் நிலத்தடி நீரும் குறையாமல் இருக்கும். அத்துடன் காட்டில் உள்ள மூன்று ஏரிகள் நிரம்புவதால் வன விலங்குகளுக்கும் ஆண்டு முழுதும் தண்ணீர் கிடைத்து வந்தது.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த வழுக்கம்பாறை ஏரியில் இருந்து தாங்கல் ஏரிக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால் 100 மீட்டர் துாரத்திற்கு 60 ஆண்டுகளுக்கு முன்பு கருங்கற்களால் தடுப்பு சுவர் கட்டியிருந்தனர்.
இந்த தடுப்பு சுவரில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் 2 இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தாங்கல் ஏரிக்கு தண்ணீர் செல்லாமல், உபரி நீர் நேரடியாக விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
கடந்த 15 ஆண்டுகளாக இதே போல் உபரி நீர் விவசாய நிலங்களுக்கும் புகுந்து 30 ஏக்கர் அளவிற்கு பயிர்கள் சேதமாகி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பயிர்கள் நாசமாகி வருவாதல் தடுப்புச் சுவரை புதுப்பிக்க வேண்டும் என வனத்துறையிடம் விவசாயிகள் பல முறை கோரிக்கை மனு கொடுத்தும், பலன் இல்லாததால் பாதிக்கப்பட்ட விவசாயி, வழக்கறிஞர் சின்னைய்யா விரப்பன் 2025ம் ஆண்டு சென்னை ஐகோர்டில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு விசாரனையின் போது வனத்துறையினர், தடுப்புச் சுவர் கட்ட திட்ட மதிப்பீடு தயாரித்து ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்தனர்.
இதையடுத்து 8 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி நீதிபதி மாலா உத்தரவிட்டார். ஆனாலும் இன்று வரை வனத்துறையினர் உடைந்த தடுப்புச் சுவரை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வில்லை. வழக்கம் போல் இந்த ஆண்டும் நெற் பயிர்கள் வெள்ளத்தில் சேதமானது.
எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு வனத்துறை மூலம் தடுப்புச் சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இல்லை எனில் விரைவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.

