/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கூட்டுறவு நகர வங்கி 109வது பேரவை கூட்டம்
/
கூட்டுறவு நகர வங்கி 109வது பேரவை கூட்டம்
ADDED : டிச 28, 2025 05:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் கூட்டுறவு நகர வங்கியின் 109வது பேரவைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, மேலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். துணை பதிவாளர் ராகினி முன்னிலை வகித்தார். பொது மேலாளர் (பொறுப்பு) குமார் ஆண்டறிக்கையும், மேலாளர் ஜெயராமன் தீர்மானமும் வாசித்தனர்.
கூட்டத்தில், வங்கியின் 2024-25ம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை வாசித்து ஏற்றுக் கொள்ளுதல், இந்தாண்டிற்கான வங்கி தலைமை மற்றும் 4 கிளைகளில் துாய்மை பணி செய்பவர்களுக்கு அரசாணைப்படி 20 சதவீதம் போனஸ் 26 ஆயிரத்து 480 ரூபாய் வழங்கியதை பேரவையில் அங்கீகரித்தல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலாளர் ரங்கநாதன் நன்றி கூறினார்.

