/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செல்லங்குப்பம் சாலை கந்தல் வாகன ஓட்டிகள் கடும் அவதி
/
செல்லங்குப்பம் சாலை கந்தல் வாகன ஓட்டிகள் கடும் அவதி
செல்லங்குப்பம் சாலை கந்தல் வாகன ஓட்டிகள் கடும் அவதி
செல்லங்குப்பம் சாலை கந்தல் வாகன ஓட்டிகள் கடும் அவதி
ADDED : டிச 24, 2025 06:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி யடைந்து வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த காணை பம்பை ஆறு அருகில் இருந்து செல்லங்குப்பம் செல்லும் சாலை உள்ளது. இச்சாலை வழியாக, செல்லங்குப்பம், கெடார் பகுதிகளுக்கு வாகன ஓட்டி கள் மற்றும் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், இச்சாலையில் தற்போது ஜல்லி கற்கள் பெயர்ந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் கந்தலாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே, கந்தலான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.