/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விதிமீறி பட்டாசு வெடித்த 17 பேர் மீது வழக்கு
/
விதிமீறி பட்டாசு வெடித்த 17 பேர் மீது வழக்கு
ADDED : நவ 01, 2024 11:32 PM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், தீபாவளியன்று விதிமீறி பட்டாசு வெடித்ததாக 17 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.
தீபாவளி பண்டிகை நாளில் பட்டாசு வெடிப்பதற்கு நேர கட்டுப்பாட்டை விதித்து காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையிலும், இரவு 7:00 மணியிலிருந்து 8:00 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டுமென அரசு தரப்பில் தெரிவித்திருந்தனர்.
விதி மீறுவோர் மீது, வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸ் தரப்பில் எச்சரித்திருந்தனர்.
இந்நிலையில், சிலர் தடையை மீறி, நேரக்கட்டுப்பாட்டை தாண்டியும் பட்டாசு வெடித்ததால், அவர்கள் மீது போலீசார் நேற்று வழக்குப் பதிந்தனர். அதன்படி மாவட்டம் முழுதும் 17 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
மேலும், தீபாவளி தினத்தில் செஞ்சி, அன்னியூர், திருவெண்ணெய்நல்லுாரில் இரண்டு இடங்கள் என 4 இடங்களில், பட்டாசு வெடித்தபோது, ஒரு வைக்கோல் போர், 3 கூரை வீடுகள் தீப்பிடித்து எரிந்தது சேதமானது.

