/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஏழுமலை பாலிடெக்னிக்கில் வளாக நேர்காணல்
/
ஏழுமலை பாலிடெக்னிக்கில் வளாக நேர்காணல்
ADDED : மார் 04, 2024 12:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் இறுதியாண்டு பயிலும் டிப்ளமோ மாணவர்களுக்கான வளாக நேர்காணல் நடந்தது.
சென்னை, பாடி பிரேக்ஸ் இந்தியா நிறுவன மேலாளர் ஸ்ரீதர், உதவி மேலாளர் ராம்பிரகாஷ், துணை அதிகாரி பிரியலட்சுமி ஆகியோர், நேர்காணலில் பங்கேற்று புதுச்சேரி, மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லுாரி, ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள் 200 பேரில், 160 பேரை தேர்வு செய்து பணி நியமன ஆணையை வழங்கினர்.
நேர்காணல் நிகழ்ச்சியை, முதல்வர் ஆமோஸ் ராபர்ட் ஜெயச்சந்திரன் துவக்கி வைத்தார். ஏற்பாடுகளை வேலை வாய்ப்பு அலுவலர் சரவண கண்ணன் செய்திருந்தார்.

