/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரூ.20 கோடி செலவில் கட்டப்படும் பஸ் நிலையம் விரைவில் திறக்க... ஏற்பாடு
/
ரூ.20 கோடி செலவில் கட்டப்படும் பஸ் நிலையம் விரைவில் திறக்க... ஏற்பாடு
ரூ.20 கோடி செலவில் கட்டப்படும் பஸ் நிலையம் விரைவில் திறக்க... ஏற்பாடு
ரூ.20 கோடி செலவில் கட்டப்படும் பஸ் நிலையம் விரைவில் திறக்க... ஏற்பாடு
ADDED : மே 20, 2024 05:46 AM

திண்டிவனம் : திண்டிவனத்தில் ரூ.20 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் நகராட்சி புதிய பஸ் நிலையத்தின் கட்டுமானப்பணிகள் 70 சதவீதம் முடிவடைந்துள்ளது. வரும் ஆகஸ்ட் மாதத்தில் புதிய பஸ் நிலையம் திறப்பு விழா நடப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.
திண்டிவனம்-சென்னை சாலையிலுள்ள பி.எஸ்.என்.எல். டவர் அருகே 6 ஏக்கர் நிலம் கடந்த 1996ம் ஆண்டு புதிய பஸ் நிலையம் கட்டுவதற்காக நகராட்சி சார்பில் வாங்கப்பட்டும், கடந்த 20 ஆண்டுகளாக அரசியல் காரணங்களுக்காக கட்டப்படாமல் இழுபறியில் இருந்து வந்தது.
தற்போதைய ஆட்சியில், ரூ.20 கோடி செலவில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த ஆண்டு ஜன.,மாதம் நடந்தது. புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கியது.
புதியதாக கட்டப்பட்டு வரும் பஸ் நிலையத்தில் ஒரே சமயத்தில் 50 பஸ்கள் நிறுத்தும் இடம், 61 கடைகள், 4 ஏ.டி.எம்.மையங்கள், சைவ, அசைவ உணவகங்கள், காத்திருப்பு கூடங்கள், காவல்துறை கட்டுப்பாட்டு அறை, பஸ்கள் முன்பதிவு அறை, பெண்களுக்கான பாலுட்டும் அறைகள், கழிப்பறை, சிறுநீர் கழிப்பிடம், இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைய உள்ளது.
தற்போது புதிய பஸ் நிலையத்திற்கான கட்டுமான பணிகள் 70 சதவீதம் முடிவடைந்துள்ளது. இதில் பஸ்கள் நிறுத்தும் இடம், பஸ் நிலையத்திற்கு உள்ளே வாடகை கடைகள், கழிப்பறைகள், பாலுட்டும் அறை, பஸ் நிலையத்தின் பின்புறப்பகுதி கட்டட பணிகள், சுற்றுச்சுவர் என பல்வேறு பணிகள் முடிந்து, பூசு வேலைகள் நடைபெற்று வருகின்றது.
முன்பகுதியிலுள்ள கமர்ஷியல் ஏரியாவில் கட்டட பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றது. மீதமுள்ள பணிகள் அனைத்தும் விரைவில் முடிவடைந்து, வரும் ஆகஸ்ட் மாதத்தில், புதிய பஸ் நிலையம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, நகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
திண்டிவனத்தில் தற்போது பெரும்பாலான தொலை துாரம் செல்லும் பஸ்கள் அனைத்தும், மேம்பாலத்தின் கீழ்பகுதியில் நின்று, பயணிகளை ஏற்றிச்செல்கின்றது. போதுமான அடிப்படை வசதிகள் இல்லாத இடத்தில் பஸ்கள் நிறுத்தப்படுவதால், பயணிகள் வெயில், மழை நேரங்களில் தொடர்ந்து அவதியடைந்து வந்தனர்.
இதற்கு எல்லாம் நிரந்தர தீர்வு காணும் வகையில், திண்டிவனத்தில் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வருவது, பொது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

