/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சொந்த பூத்தில் ஓட்டு குறைந்தால் பொறுப்பு 'காலி' நிர்வாகிகளுக்கு பா.ஜ., மாவட்ட தலைவர் எச்சரிக்கை

ADDED : மார் 19, 2024 05:38 AM

வானுார்: 'சொந்த பூத்தில் குறைந்த ஓட்டு பெற்று தரும் நிர்வாகிகள், தேர்தலுக்கு பிறகு பொறுப்பில் இருக்க முடியாது' என பா.ஜ., மாவட்ட தலைவர் எச்சரித்துள்ளார்.
லோக்சபா தேர்தலையொட்டி, பா.ஜ., சார்பில், வானுார் சட்சபை தொகுதி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நேற்று மயிலம் ரோட்டில் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜேந்திரன் அலுவலகத்தை திறந்து வைத்து பேசுகையில், 'விழுப்புரம் மாவட்டத்தில் பா.ஜ.,வின் ஒவ்வொரு நிர்வாகியும் சுறுசுறுப்புடன் பணியாற்ற வேண்டும். வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும். ஒவ்வொரு நிர்வாகியும், சொந்த பூத்தில் அதிக ஓட்டுகளை பெற்றுத் தர வேண்டும்.
குறைந்த ஓட்டு பெற்று தரும் நிர்வாகிகள், தேர்தலுக்கு பிறகு பொறுப்பில் இருக்க முடியாது. மோடியின் 10 ஆண்டு சாதனைகள் குறித்து, பொது மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும். அதிக சதவீத ஓட்டுகளை நாம் பெற்றுத்தந்து வெற்றி வாய்ப்புக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்' என்றார்.
மாவட்ட பொதுச்செயலாளர்கள் எத்திராஜ், ராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஞானசேகர், மாவட்ட பொருளாளர் சக்திநாராயணன், துணைத் தலைவர் மூர்த்தி, மாவட்ட செயலாளர் கனகராஜ், தொகுதி பொறுப்பாளர்கள் செல்வகுமார், ஒன்றிய தலைவர்கள் முருகன், சண்முகம், செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர்.