/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயிலம் அரசு நடுநிலை பள்ளியில்ஆண்டு விழா
/
மயிலம் அரசு நடுநிலை பள்ளியில்ஆண்டு விழா
ADDED : பிப் 19, 2024 05:25 AM

மயிலம்: மயிலம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
விழாவிற்கு, பள்ளி வட்டாரக் கல்வி அலுவலர் மதன்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் செல்வகுமார், ஊராட்சி தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார். ஆசிரியர் பிரகாஷ் ஆண்டறிக்கை வசித்தார். சிறப்பு விருந்தினர்களாக இன்ஸ்பெக்டர் கமலஹாசன் ஸ்டேட் பாங்க் மேலாளர் ராஜிவ் மோகன், வட்டார மேற்பார்வையாளர் லட்சுமி நரசிம்மன் பேசினர்.
விழாவை முன்னிட்டு நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. விழாவில், 5 வயது நிறைவடைந்த மாணவர்களை பள்ளியில் சேர்க்க உறுதிமொழியேற்கப்பட்டது. கல்வி மேலாண்மைக் குழு தலைவர் மேரி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

