/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அண்ணாதுரை பிறந்த நாள் மஸ்தான் அறிக்கை
/
அண்ணாதுரை பிறந்த நாள் மஸ்தான் அறிக்கை
ADDED : செப் 14, 2025 01:56 AM

செஞ்சி : அண்ணாதுரை பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என தி.மு.க., விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்தநாளை முன்னிட்டு, நாளை ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள் அனைத்து அணி நிர்வாகிகள், தங்கள் பகுதியில் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.
அத்துடன் 2026 சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க., வெற்றி பெறுவதற்கு நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்க வேணடும்.
வரும் 17ம் தேதி கரூரில் நடக்க உள்ள தி.மு.க., துவங்கப்பட்ட பவள விழா, அண்ணாதுரை பிறந்தநாள் விழா, ஈ.வே.ரா., பிறந்த நாள் என நடைபெறும் முப்பெரும் விழாவில் விழாவில், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு விருதுகளை வழங்கி பேச உள்ளனர்.
இந்த முப்பெரும் விழாவில் விழுப்புரம் வடக்கு மாவட்டத்தை சேர்ந்த மாநில, மாவட்ட,ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.