/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தானா சேர்ந்த கூட்டம் அந்தக்காலம் ரூபா கொடுத்தா சேரும் இந்தக்காலம் ஆள் பிடிக்கும் ஏஜென்டாக மாறும் கட்சி நிர்வாகிகள்
/
தானா சேர்ந்த கூட்டம் அந்தக்காலம் ரூபா கொடுத்தா சேரும் இந்தக்காலம் ஆள் பிடிக்கும் ஏஜென்டாக மாறும் கட்சி நிர்வாகிகள்
தானா சேர்ந்த கூட்டம் அந்தக்காலம் ரூபா கொடுத்தா சேரும் இந்தக்காலம் ஆள் பிடிக்கும் ஏஜென்டாக மாறும் கட்சி நிர்வாகிகள்
தானா சேர்ந்த கூட்டம் அந்தக்காலம் ரூபா கொடுத்தா சேரும் இந்தக்காலம் ஆள் பிடிக்கும் ஏஜென்டாக மாறும் கட்சி நிர்வாகிகள்
UPDATED : ஜூலை 22, 2025 08:31 AM
ADDED : ஜூலை 22, 2025 06:31 AM
தி .மு.க., துவங்கி கருணாநிதி முதல்வராக இருந்தது வரை அக்கட்சியில் உள்ள தலைவர்களின் பேச்சை கேட்க ஆயிரக்கணக்கில் மக்கள் தானாக ஆர்வமுடன் திரண்டனர்.
அதே போன்று அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., துவங்கி முதல்வராக இருந்த போதும், ஜெ., முதல்வராக இருந்த போதும் இவர்களின் கூட்டங்களுக்கு தானாக கூட்டம் சேர்ந்தது.
இவர்களின் கூட்டங்களுக்கு வாகன ஏற்பாடு செய்தால் கட்சி நிர்வாகிகளின் செல்வாக்கினாலும் கட்சி மீதிருந்த பற்று காரணமாகவும் பணம் வாங்காமல் தொண்டர்களும், பொது மக்களும் கூட்டங்களுக்கு வந்தனர்.
அதே போன்று, இரு கட்சிகளிலும் இரண்டாம் கட்ட முக்கிய நிர்வாகிகள் பேச்சை கேட்பதற்காகவும் கூட்டம் தானாக சேர்ந்தது. இந்த நிலை தற்போது முற்றிலும் மாறிவிட்டது.
ஸ்டாலின் கூட்டம் என்றாலும், பழனிசாமி கூட்டம் என்றாலும் பணம் கொடுத்தே கூட்டம் சேர்க்கும் நிலை இரண்டு கட்சியிலும் உருவாகி விட்டது. இவர்கள் நடத்தும் ரோடு ஷோவுக்கும் மக்கள் கூட்டத்தை பணம் கொடுத்தே கூட்டுகின்றனர்.
சில ஆண்டுகளாக மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கும் சிறிய கூட்டங்களில் உள்ளூர் மக்கள் தலைகாட்டுவதில்லை. குறிப்பாக பெண்கள் எந்த கட்சி கூட்டம் என்றாலும் பணம் தரவில்லை என்றால் கூட்டத்திற்கு வருவதில்லை.
அரசியல் கட்சி கூட்டங்கள் பெண்கள் இல்லை என்றால் பெயிலியர் கூட்டமாக மாறி விடுகிறது.
அது கூட்டம் நடத்தும் கட்சியின் இமேஜை பாதிக்கிறது. இதனால், எப்படியாவது பெண்களை கூட்டத்திற்கு அழைத்து வரவேண்டும் என்ற அசைன்மென்ட் கட்சி நிர்வாகிகளுக்கு கொடுக்கப்படுகிறது. இவர்கள் சிறிய நோட்டுடன் வீடுவீடாகச் சென்று கூட்டத்துக்கு பெண்களை அழைத்து வர வேண்டிய வேலையை செய்கின்றனர்.
முக்கிய தலைவர்களின் கூட்டம் என்றால் ஆண், பெண் என இரண்டு தரப்பினரையும் கூட்டத்திற்கு அழைத்து வரும் ஏஜன்ட்டாக கட்சி நிர்வாகிகள் மாறிவிட்டனர்.
கூட்டத்திற்கு வருபவர்களுக்கு உள்ளூர் கூட்டம் என்றால் 100 ரூபாயும், வெளியூர் கூட்டம் என்றால் 200 ரூபாயும் தருகின்றனர்.
இதற்காக ஆளும் கட்சியும், எதிர் கட்சியும் சிறிய கூட்டங்களுக்கு கூட பெரும் தொகையை செலவு செய்கின்றனர்.
தேர்தல் நெருங்கும் போது இந்த செலவு பல மடங்கு அதிகரித்து, ஆள் பிடிக்கும் செலவு பிரதான செலவாக இருக்கும் என்கின்றனர் கட்சி நிர்வாகிகள்.

