sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 20, 2025 ,புரட்டாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கோலியனுாரில் ரூ.40 கோடியில் மேம்பாலம்... அமைகிறது; ஒரு கி.மீ., நீள துாரத்திற்கு வடிவமைக்க திட்டம்

/

கோலியனுாரில் ரூ.40 கோடியில் மேம்பாலம்... அமைகிறது; ஒரு கி.மீ., நீள துாரத்திற்கு வடிவமைக்க திட்டம்

கோலியனுாரில் ரூ.40 கோடியில் மேம்பாலம்... அமைகிறது; ஒரு கி.மீ., நீள துாரத்திற்கு வடிவமைக்க திட்டம்

கோலியனுாரில் ரூ.40 கோடியில் மேம்பாலம்... அமைகிறது; ஒரு கி.மீ., நீள துாரத்திற்கு வடிவமைக்க திட்டம்


ADDED : செப் 20, 2025 06:44 AM

Google News

ADDED : செப் 20, 2025 06:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், கோலியனுார் கூட்ரோடு பகுதியில், ரூ.40 கோடி செலவில் பிரமாண்ட மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இந்த பாலம் கூட்ரோடு துவங்கி, பண்ருட்டி சாலையில் ரயில்வே பாதை வரை ஒரு கி.மீ., நீளத்திற்கு அமைய உள்ளது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் இருந்து கும்பகோணம் வழியாக தஞ்சாவூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலையை (வி.கே.டி.,) நான்கு வழிச்சாலையாக அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் மூன்று பிரிவாக மேற்கொள்ளப்பட்டது.

இதில், விக்கிரவாண்டி முதல் சேத்தியாத்தோப்பு வரையிலான 66 கி.மீ., நீள சாலை பணி, கடந்த 2017ம் ஆண்டு ஒப்பந்தம் விடப்பட்டது.

இதனை கடந்த 2018ம் ஆண்டு ரிலையன்ஸ் இன்ப்ராஸ்டெக்சர் நிறுவனம் துவக்கியது. இதையடுத்து கடந்த, 2019ம் ஆண்டு கொரானோ தொற்று காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டது. பின், கால அவகாசம் வழங்கியும் ரிலையன்ஸ் நிறுவனம் பணியை முடிக்கவில்லை.

இந்நிலையில் விக்கிரவாண்டி- சேத்தியாத்தோப்பு இடையிலான நான்கு வழிச்சாலை அமைப்பதற்கான பணி, கடந்த பிப்., மாதம் நகாய் சார்பில் டெண்டர் விடப்பட்டது. கேரளாவைச் சேர்ந்த இ.கே.கே., என்ற நிறுவனம் ரூ.652.3 கோடி மதிப்பில் திட்டப் பணிகளை செய்வதற்கு முன் வந்தது.

இதனை நகாய் ஏற்று, கடந்த மார்ச் மாதம், டெண்டர் இறுதி செய்யப்பட்டது. கடந்த ஜூன் மாதம், 25 ம் தேதி முதல் வரும் 2027 ம் ஆண்டு ஜூன், 25ம் தேதி வரையிலான இரு ஆண்டுகளில் திட்டப் பணிளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து பணிகள் கடந்த மாதம், சாலை விரிவாக்கப் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டப்பணியில் பண்ருட்டி மற்றும் வடலுார் பைபாஸ் சாலை ஆகிய இடங்களில் ரயில்வே மேம்பாலம், கோலியனுார் கூட்ரோடு முதல் பண்ருட்டி சாலையில் உள்ள ரயில்வே பாதை வரை பிரமாண்ட மேம்பாலம் அமைக்கப்படுகிறது.

இரு பகுதியையும் இணைக்கும் வகையில் ரூ.40 கோடி செலவில் நான்கு வழிப்பாதையுடன் மேம்பாலம் அமைகிறது.

இதனால், விழுப்புரம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து தடையின்றி இயங்க முடியும். இதேபோல், விக்கிரவாண்டி - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள், போக்குவரத்து நெரிசல் இன்றி, மேம்பாலம் வழியாக செல்ல முடியும்.

இந்த திட்டத்தின்படி, விக்கிரவாண்டி- சேத்தியாத்தோப்பு இடையே ஒரு பெரிய மேம்பாலம், இரண்டு ரயில்வே மேம்பாலம், கிராமங்களை இணைக்கும் பகுதியில் பெரிய வாகன அடிப்பாதை 12, சிறிய வாகன அடிப்பாதை 10, ஆற்றுப்பகுதியில் சிறு பாலங்கள் 23 மற்றும் சிறுபாலம் 95 அமைக்கப்படுகிறது.

கடந்த மாதம் சாலை விரிவாக்கப் பணிகள் துவங்கியது. கோலியனுர் கூட்ரோடு பகுதியில் இருந்து பண்ருட்டி செல்லும் சாலையின் இடதுபுறம் இருந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டன.

இதேபோல், விக்கிரவாண்டி மார்க்கத்தில் வலதுபுற சாலையோரம் அளவீடு செய்து, விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இப்பணியை மேற்கொண்டுள்ள ஒப்பந்த நிறுவனத்திற்கு, விவசாய நிலத்தில் இருந்து மண் எடுப்பதற்கான அனுமதி கிடைக்கும்பட்சத்தில், சாலைப் பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவடைய வாய்ப்புள்ளது.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us