/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பூச்சி மருந்து குடித்து தொழிலாளி தற்கொலை
/
பூச்சி மருந்து குடித்து தொழிலாளி தற்கொலை
ADDED : மே 14, 2024 06:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: திண்டிவனம் அருகே குடும்பத் தகராறில் பூச்சி மருந்து குடித்து விவசாய தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
திண்டிவனம் அடுத்த கீழ்கூடலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ், 40; விவசாய தொழிலாளி. இவர் குடும்ப பிரச்னை காரணமாக மன உளைச்சலில் இருந்தார். கடந்த 9ம் தேதி காலை, விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் குடிபோதையில் இருந்த அவர், பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று முன்தினம் இறந்தார். திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

