/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சியில் இந்து முன்னணி விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலம்
/
செஞ்சியில் இந்து முன்னணி விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலம்
செஞ்சியில் இந்து முன்னணி விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலம்
செஞ்சியில் இந்து முன்னணி விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலம்
ADDED : செப் 11, 2024 11:15 PM

செஞ்சி : செஞ்சியில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை கடலில் விஜர்சனம் செய்ய ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
செஞ்சி பகுதியில் விநாயகர் சதுர்த்தியன்று இந்து முன்னணி, இந்து அமைப்புகள் மற்றும் பொது மக்கள் சார்பில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தினர். இதில் பெரும் பகுதி சிலைகளை ஆங்காங்கே நீர்நிலைகளில் விஜர்சனம் செய்தனர். இந்து முன்னணி சார்பில் 26வது ஆண்டாக வைக்கப்பட்ட சிலைகளும், பொது மக்கள் சார்பில் வைக்கப்பட்ட சிலைகளில் மீதம் இருந்த சிலைகள் என 22 சிலைகளை மரக்காணம் கடலில் விஜர்சனம் செய்ய நேற்று கொண்டு சென்றனர். முன்னதாக காலை 12 மணிக்கு சத்திரத்தெரு விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. இந்து முன்னாள் மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். கோட்ட தலைவர் சிவா ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
ஊர்வலம் செஞ்சி கூட்ரோட்டில் முடிவடைந்தது. அங்கு நடந்த நிகழ்ச்சியில் இந்து முன்னணி திருச்சி கோட்ட பொதுச்செயலாளர் குணேசேகரன் சிறப்புரையாற்றினார். முன்னாள் மாவட்ட அமைப்பாளர் விஷ்ணுராஜன் துவக்க உரை நிகழ்த்தினார். நகர செயலாளர் கார்த்திகேயன், பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட துணை தலைவர்கள் அன்பழகன், ஏழுமலை, நகர தலைவர் தங்கராமு, மகளிரணி விஜயலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர். வழக்கறிஞர் ராஜா தேசிங்கம் நன்றி கூறினார்.
எஸ்.பி., தீபக் சிவாச் தலைமையில் ஏ.டி.எஸ்.பி., திருமலை, செஞ்சி டி.எஸ்.பி., செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் 250க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

