/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கூடுதல் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் சரிபார்ப்பு
/
கூடுதல் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் சரிபார்ப்பு
கூடுதல் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் சரிபார்ப்பு
கூடுதல் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் சரிபார்ப்பு
ADDED : ஏப் 04, 2024 11:14 PM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் லோக்சபா தேர்தலுக்கு கூடுதல் தேவையாக உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், சேமிப்பு கிடங்கில் இருந்து எடுத்தனர்.
விழுப்புரத்தில் நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில் உள்ள பழைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள, தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சேமிப்பு கிடங்கிற்கு, நேற்று கொண்டு செல்லப்பட்டது. காலை 10 மணிக்கு தொடங்கிய இப்பணியை மாவட்ட தேர்தல் அதிகாரி பழனி பார்வையிட்டு தொடங்கி வைத்தார். அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், கிடங்கில் இருந்த பழைய மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள் எடுத்து, அனுப்பி வைக்கப்பட்டது.
தொடர்ந்த கலெக்டர் கூறும் போது,விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தந்த தொகுதிகளுக்கும், ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், தேவையான கூடுதல் பதிவு ஓட்டு பதிவு இயந்திரங்கள், கட்சி பிரநிதிகள் முன்னிலையில், கணிணி மூலம் குலுக்கல் முறையில் ஒதிக்கீடு செய்யப்பட்டது.
இதில், விழுப்புரம் லோக்சபா தனி தொகுதிக்கு உட்பட்ட திண்டிவனம் சட்ட சபை தொகுதிக்கு கூடுதலாக 320 இயந்திரங்களும், வானூர் (தனி) தொகுதிக்கு 333ம், விழுப்புரம் தொகுதிக்கு 346ம், விக்கிரவாண்டி தொகுதிக்கு 330ம், திருக்கோவிலூர் தொகுதிக்கு 343ம் என மொத்தம் 1,672 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தந்த தொகுதிகளுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது.
விழுப்புரத்தில் தேர்தல் ஆணைய சேமிப்பு கிடங்கில் மொத்தம் இருப்புள்ள 1,812 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இருந்து, விழுப்புரம் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கும் 1,672 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்த நிலையில், மீதம் 140 இயந்திரங்கள் உள்ளது.
இதனுடன், செஞ்சி, மயிலம் சட்டமன்ற தொகுதிகளுக்கும், கூடுதலாக 544 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படும் நிலை உள்ளது. அதனால், விழுப்புரம் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் வைக்கப்பட்டுள்ள 597 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், எடுக்கப்பட்டு, விழுப்புரம் தேர்தல் ஆணைய இயந்திர கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவைகள் பொறியாளர்கள் மூலமாக சோதனை செய்யப்பட்டு, விரைந்து தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும், என்று கலெக்டர் கூறினார்.
விழுப்புரம் ஆர்.டி.ஓ., காஜாசாகுல்அமீது, தேர்தல் பிரிவு அதிகாரி தமிழரசன், தனி தாசில்தார் கணேசன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

