/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நடுரோட்டில் வாகன சோதனை விபத்து ஏற்படும் அபாயம்
/
நடுரோட்டில் வாகன சோதனை விபத்து ஏற்படும் அபாயம்
ADDED : ஏப் 16, 2024 07:31 AM

விக்கிரவாண்டி, : விக்கிரவாண்டி டோல் கேட்டில் வணிகவரித்துறை அதிகாரிகள் நடு ரோட்டில் வாகனங்களை நிறுத்தி பில் தணிக்கை செய்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
லோக்சபா தேர்தலையொட்டி, விக்கிரவாண்டி டோல் கேட்டில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையின் போது, வாகனங்களை சாலையோரமாக நிறுத்தச் செய்யாமல் நடுரோட்டிலேயே வாகனங்களை நிறுத்துகின்றனர்.
இதனால் டோல் கேட்டைக் கடந்து செல்லும் பிற வாகனங்கள் நடுரோட்டில் நிற்கும் வாகனங்களின் மீது மோதி விபத்து மற்றும் உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது. அரசு அதிகாரிகள் தங்களது கடமைகளை செய்யும்போது பொதுமக்களின் நிலைமைகளையும், எதிர் விளைவுகளையும் நினைத்து செயல்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
எனவே, சோதனையின் போது வாகனங்களை சாலை யோரம் நிறுத்தி சோதனை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

