/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வி.சி., கொடிக்கம்பத்தை அகற்ற மறுப்பு; விக்கிரவாண்டி அருகே பரபரப்பு
/
வி.சி., கொடிக்கம்பத்தை அகற்ற மறுப்பு; விக்கிரவாண்டி அருகே பரபரப்பு
வி.சி., கொடிக்கம்பத்தை அகற்ற மறுப்பு; விக்கிரவாண்டி அருகே பரபரப்பு
வி.சி., கொடிக்கம்பத்தை அகற்ற மறுப்பு; விக்கிரவாண்டி அருகே பரபரப்பு
ADDED : மார் 22, 2024 10:17 PM
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில், விடுதலை சிறுத்தை கட்சிக் கொடி கம்பத்தை அகற்ற நிர்வாகிகள் மறுத்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
லோக்சபா தேர்தலையொட்டி, நன்னடத்தை விதி அமல் காரணமாக நேற்று விக்கிரவாண்டி வடக்கு பைபாஸ் பகுதியில் உள்ள அனைத்து கட்சிக் கொடி கம்பங்களும் அகற்றப்பட்டது. காலை 9:00 மணி அளவில் வி.சி., கட்சியின் 60 அடி உயர கொடி கம்பத்தை இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் அதிகாரிகள் அகற்ற முயன்றனர்.
அப்போது அங்கு வந்த வி.சி., ஒன்றிய செயலாளர் வெற்றிவேந்தன் மற்றும் கட்சியினர் கொடி கம்பத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு நிலவியது.
பேச்சுவார்த்தைக்குப்பின், கட்சியினர் சமாதானம் ஆகி கொடி கம்பத்தை அகற்ற ஒப்புக்கொண்டனர்.