/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம் தி.மு.க.,வில் கோஷ்டி பூசல்; கூடுதல் ஓட்டுகள் பெறுவதில் சிக்கல்
/
திண்டிவனம் தி.மு.க.,வில் கோஷ்டி பூசல்; கூடுதல் ஓட்டுகள் பெறுவதில் சிக்கல்
திண்டிவனம் தி.மு.க.,வில் கோஷ்டி பூசல்; கூடுதல் ஓட்டுகள் பெறுவதில் சிக்கல்
திண்டிவனம் தி.மு.க.,வில் கோஷ்டி பூசல்; கூடுதல் ஓட்டுகள் பெறுவதில் சிக்கல்
ADDED : ஏப் 11, 2024 11:51 PM
திண்டிவனம் பகுதியில் தி.மு.க.,வினருக்கிடையே உள்ள கோஷ்டி பூசல், கூட்டணி கட்சியினரின் ஒத்துழையாமை காரணமாக வி.சி.,க்கு கூடுதல் ஓட்டு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
திண்டிவனம் நகராட்சியில் மொத்தம் உள்ள 33 கவுன்சிலர்களில் 26 பேர் தி.மு.க., வைச் சேர்ந்தவர்கள். நகரமன்றத்தில் தி.மு.க., கவுன்சிலர்களுக்குள் பிளவு பட்டு, அமைச்சர் மஸ்தான் ஆதரவு, எதிர் என 2 அணிகளாக செயல்படுகின்றனர்.
அமைச்சர் தரப்பில், தனி அணியாக செயல்படும் கவுன்சிலர்கள் தரப்பை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தும், முரண்டு பிடித்து இதுவரை தனி கோஷ்டியாகவே செயல்பட்டு வருகின்றனர்.
தற்போது தேர்தல் நேரம் என்பதால் அமைச்சர் உத்தரவின் பேரில் வார்டு வாரியாக பூத் செலவிற்கு கவனிப்பு நடந்தது. இதில் ஒரு சில பூத்தில் கவனிப்பு தொகையை வாங்காமல் புறக்கணித்துள்ளனர்.
தனி அணியாக செயல்படும் தி.மு.க., கவுன்சிலர்கள் தரப்பில், அனைத்து வார்டுகளிலும் தங்கள் கோஷ்டி ஆதரவாளர்களை அழைத்துக் கொண்டு தனியாக வி.சி., கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டு கேட்டு ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இதுஇல்லாமல் திண்டிவனம் நகராட்சியில், வி.சி., கட்சி துணைச் சேர்மனுக்கு, நகர மன்றத்தில், சேர்மனுக்கு அருகே இருக்கை வழங்க வேண்டும் என கோரிக்கை தொடர்பாக நீண்ட இழுபறிக்குப்பின், தனி இருக்கை வழங்கப்பட்டது.
இந்த பிரச்னையால் தி.மு.க., - வி.சி., இடையே மனக்கசப்பு உள்ளது. தி.மு.க.,வில் நிலவும் உட்கட்சி பூசல், நகர மன்றத்தில் துணை தலைவருக்கு இருக்கை ஒதுக்கும் பிரச்னையில் ஏற்பட்ட மோதல் மற்ற கூட்டணி கட்சியினர் ஒத்துழையாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் நீரு பூத்த நெருப்பாகவே இருந்து வருகிறது. இதனால், வி.சி.,க்கு கூடுதல் ஓட்டுகள் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
-நமது நிருபர்-

