/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஊருக்குள் வராமல் பைபாசில் சென்ற 14 பஸ்களுக்கு சோதனை அறிக்கை
/
ஊருக்குள் வராமல் பைபாசில் சென்ற 14 பஸ்களுக்கு சோதனை அறிக்கை
ஊருக்குள் வராமல் பைபாசில் சென்ற 14 பஸ்களுக்கு சோதனை அறிக்கை
ஊருக்குள் வராமல் பைபாசில் சென்ற 14 பஸ்களுக்கு சோதனை அறிக்கை
ADDED : மே 18, 2024 06:08 AM
வானுார் : திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதிக்கு வராமல், பைபாஸ் வழியாக சென்ற 14 அரசு பஸ்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் வழியாக தினந்தோறும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள், சென்னை, திண்டிவனம், செஞ்சி, திருவண்ணாமலை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வருகிறது.
புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக செல்லும் பஸ்கள் அனைத்தும், திருச்சிற்றம்பலம் கூட்ரோடு வழியாக வந்து செல்கிறது.
இதே போன்று திண்டிவனம் மார்க்கத்தில் இருந்து வரும் பஸ்கள் அனைத்தும், திருச்சிற்றம்பலம் கூட்ரோடு வழியாக வந்து, மொரட்டாண்டி டோல்கேட்டை கடந்து செல்கிறது.
ஆனால் சில தினங்களாக அரசு பஸ்கள், திருச்சிற்றம்பலம் கூட்ரோடு வழியாக வராமல், பைபாஸ் வழியாக கடந்து சென்றது.
இதனால் வெளியூர்களுக்கு பணிக்கு செல்லும் பயணிகள் மற்றும் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இது குறித்து திண்டிவனம் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து திண்டிவனம் ஆர்.டி.ஓ., முக்கண்ணன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் நேற்று முன்தினம் மற்றும் நேற்றும் புளிச்சப்பள்ளம் சந்திப்பு அருகில் சோதனை மேற்கொண்டார்.
அப்போது, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு வழியாக செல்லாமல் பைபாஸ் சாலை வழியாக சென்ற 14 பஸ்களை ஆர்.டி.ஓ., அதிகாரிகள் மடக்கினர்.
அவர்களுக்கு, சோதனை அறிக்கை வழங்கப்பட்டதோடு, இனிமேல் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு வழியாக சென்று பயணிகளை ஏற்றவும், இறக்கி விட வேண்டும் என டிரைவர்களுக்கு அறிவுரைவழங்கினர்.

