/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முதல்வரின் வாக்குறுதிகள் நிறைவேறிட ஆதரவு தாருங்கள் : லட்சுமணன் எம்.எல்.ஏ.,
/
முதல்வரின் வாக்குறுதிகள் நிறைவேறிட ஆதரவு தாருங்கள் : லட்சுமணன் எம்.எல்.ஏ.,
முதல்வரின் வாக்குறுதிகள் நிறைவேறிட ஆதரவு தாருங்கள் : லட்சுமணன் எம்.எல்.ஏ.,
முதல்வரின் வாக்குறுதிகள் நிறைவேறிட ஆதரவு தாருங்கள் : லட்சுமணன் எம்.எல்.ஏ.,
ADDED : ஏப் 13, 2024 05:00 AM

விழுப்புரம்: விழுப்புரம் தொகுதி வி.சி., வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து, கண்டமங்கலம் பகுதியில் லட்சுமணன் எம்.எல்.ஏ., ஓட்டு சேகரித்தார்.
கண்டமங்கலம் ஒன்றியம் குமளம், வி.மாத்துார், வாதானுார், பி.எஸ்.பாளையம், எல்.ஆர்.பாளையம், கெங்கராம்பாளையம், வி.புதுார், அற்பிசம்பாளையம், சிறுவந்தாடு, மோட்சகுளம், வி.அகரம், பஞ்சமாதேவி, கள்ளிப்பட்டு, வடவாம்பாளையம், பூவரசங்குப்பம், பரசுரெட்டிப்பாளையம், எஸ்.மேட்டுப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில், தி.மு.க., மாநில மருத்துவரணி இணை செயலாளரான லட்சுமணன் எம்.எல்.ஏ., பிரசாரம் செய்தார். குமளம் கிராமத்தில், அவர் பேசியதாவது : ஒன்றியத்தில் காங்., தலைமையிலான அரசு பொறுப்பேற்றால், மகளிர் மேம்பாட்டிற்காக மகாலட்சுமி திட்டம் செயல்படுத்தப்படும். மகளிர் வளர்ச்சியை மேம்படுத்தும் நமது முதல்வரின் வாக்குறுதிகள் நிறைவேறிட பானை சின்னத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்.
நம்முடைய பிள்ளைகள் கல்வி பெற, படித்தவர்களுக்கு வேலை கிடைக்க, தமிழர்களின் உரிமைகள் மீட்க, இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் எனக் கூறினார்.
நிகழ்ச்சியில், ஒன்றிய சேர்மன் வாசன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் பிரபாகரன், அவைத்தலைவர் அசோக்குமார், பொருளாளர் முரளிதரன், மாவட்ட பிரதிநிதிகள் ராஜேந்திரன், முருகன், சரவணன், இளைஞரணி அமைப்பாளர் ஏழுமலை, வி.சி., மாவட்ட செயலாளர் பொன்னிவளவன், ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செழியன், தொகுதி செயலாளர் பால்வண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

