/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கூட்டுறவு அச்சகத்தில் தேர்தல் படிவங்கள் அச்சடிக்கும் பணிகள்: கலெக்டர் ஆய்வு
/
கூட்டுறவு அச்சகத்தில் தேர்தல் படிவங்கள் அச்சடிக்கும் பணிகள்: கலெக்டர் ஆய்வு
கூட்டுறவு அச்சகத்தில் தேர்தல் படிவங்கள் அச்சடிக்கும் பணிகள்: கலெக்டர் ஆய்வு
கூட்டுறவு அச்சகத்தில் தேர்தல் படிவங்கள் அச்சடிக்கும் பணிகள்: கலெக்டர் ஆய்வு
ADDED : மார் 27, 2024 11:17 PM

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு அச்சகத்தில் தேர்தல் படிவங்கள் அச்சடிப்பது குறித்த முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
விழுப்புரத்தில் உள்ள மாவட்ட கூட்டுறவு அச்சகத்தில், லோக்சபா தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் படிவங்கள், வேட்பாளர்கள் விவரங்கள் உள்ளிட்டவைகள் அச்சிடப்பட்டு வருகிறது. அங்கு பாதுகாப்பாக அச்சடிப்பது தொடர்பாக, முன்னேற்பாடு பணிகள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி நேற்று ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, அரசு மகளிர் கல்லுாரியில், ஓட்டுப் பதிவு மையங்களில் பணிபுரியவுள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகளையும் ஆய்வு செய்தார்.
அவர் கூறியதாவது:
தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள், நன்னடத்தை விதிகள் மற்றும் தேர்தல் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு அச்சகத்தில் தேர்தல் பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் படிவங்கள், வேட்பாளர்கள் விவரங்கள் உள்ளிட்டவைகளை பாதுகாப்பாக அச்சடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து அரசு கல்லூரியில், ஓட்டுப் பதிவு மையங்களில் பணிபுரிவுள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தவும் பணிகள் நடக்கிறது. மையத்தில் அடிப்படை வசதிகள், பயிற்சிக்கான உபகரணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளிலும், இதற்கான பயிற்சி தனித்தனியாக நடத்தப்பட உள்ளது' என்றார்.
ஆய்வின்போது எஸ்.பி., தீபக்சிவாச், கூடுதல் கலெக்டர் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், ஆர்.டி.ஓ., காஜாசாகுல்ஹமீது, நகராட்சி ஆணையர் ரமேஷ், தாசில்தார் வசந்தகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

