/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேர்தல் நடத்தை விதி அறியாமல் குறைகேட்பு கூட்டத்திற்கு வந்த மக்கள்
/
தேர்தல் நடத்தை விதி அறியாமல் குறைகேட்பு கூட்டத்திற்கு வந்த மக்கள்
தேர்தல் நடத்தை விதி அறியாமல் குறைகேட்பு கூட்டத்திற்கு வந்த மக்கள்
தேர்தல் நடத்தை விதி அறியாமல் குறைகேட்பு கூட்டத்திற்கு வந்த மக்கள்
ADDED : மே 14, 2024 05:57 AM
விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்தும், தெரியாமல் ஏராளமானோர் மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், லோக்சபா தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடந்தது. இதற்காக, தேர்தல் ஆணையம், மார்ச் 16ம் தேதி தேர்தல் அறிவிப்பை வெளியிட்ட தினத்திலிருந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. தேர்தல் முடிந்து, ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ளது.
மார்ச் 16ம் தேதியிலிருந்தே, தேர்தல் நடத்தை விதி காரணமாக, வாராந்திர குறைகேட்புக் கூட்டம், கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழச்சிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால், கலெக்டர் அலுவலகத்தில் பெட்டி வைத்து, அதில் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த அறிவிப்பை அறியாத மக்கள், வாரம்தோறும் மனு அளிக்க வருகின்றனர்.
தேர்தல் முடிந்த பிறகு, மனு பெறுவார்கள் என்ற எண்ணத்தில், மீண்டும் தற்போது மனு அளிக்க பலர் திரண்டு வருகின்றனர். திங்கட்கிழமையான நேற்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் நடைபெறாத நிலையில், வழக்கம்போல் ஏராளமான பொது மக்கள் மனு அளிக்க திரண்டு வந்திருந்தனர்
இதனால், விழுப்புரம் கலெக்டர் அலுவலக வாயில் ஆர்ச் பகுதியில் போலீசார் நியமிக்கப்பட்டு, கூட்டமாக வந்த மக்களை திருப்பி அனுப்பினர். மனு எடுத்து வந்தவர்கள் மட்டும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளே உள்ள பெட்டியில் போட்டுச்செல்லுமாறு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆனாலும், ஏராளமான பொதுமக்கள், விவரம் அறியாத முதியவர்கள், விவசாயிகள் என மனு அளிக்க வந்தனர். குறை கேட்பு கூட்டம் நடக்காததால், அவர்கள் பெட்டியில் மனு அளித்து சென்றனர்.

