/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உயிரை பணயம் வைத்து காத்திருக்கும் பயணிகள்: விக்கிரவாண்டி ரயில் நிலையத்தில்தான் இந்த கூத்து
/
உயிரை பணயம் வைத்து காத்திருக்கும் பயணிகள்: விக்கிரவாண்டி ரயில் நிலையத்தில்தான் இந்த கூத்து
உயிரை பணயம் வைத்து காத்திருக்கும் பயணிகள்: விக்கிரவாண்டி ரயில் நிலையத்தில்தான் இந்த கூத்து
உயிரை பணயம் வைத்து காத்திருக்கும் பயணிகள்: விக்கிரவாண்டி ரயில் நிலையத்தில்தான் இந்த கூத்து
ADDED : ஏப் 30, 2024 10:43 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ரயில் நிலையத்தில் 2 நடைமேடைகள் இருந்தும் ரயிலை நடைமேடை அல்லாத நடுவில் உள்ள டிராக்கில் நிறுத்தி ஆபத்தான நிலையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் நிலை உள்ளது. இதற்கு ரயில்வே உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விக்கிரவாண்டி ரயில் நிலையத்திலிருந்து விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வசிப்பவர்கள் தினமும் பணி நிமித்தம் காரணமாக சென்னைக்கு சென்று வருகின்றனர்.ரயில் நிலையத்தில் 1வது மற்றும் 2வது நடைமேடைகள் உள்ளது. இதன் நடுவே 4 ரயில் டிராக்குகள் உள்ளன. வழக்கமாக முதலாவது நடைமேடையில் சென்னையிலிருந்து விழுப்புரம் நோக்கிச் செல்லும் ரயில்கள் நின்று பயணிகளை ஏற்றியும், இறக்கியும் செல்கின்றன. இரண்டாவது 2வது நடைமேடையில் சென்னை நோக்கிச் செல்லும் ரயில்கள் ஒரு நிமிடம் மட்டுமே நின்று பயணிகளை ஏற்றியும், இறக்கியும் செல்வது வழக்கம்.
இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன் இந்த இரண்டாவது நடைமேடையில் டிராக்ககில் சரக்கு ரயில் பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதனால் சென்னை நோக்கிச் செல்லும் ரயில்கள் இரண்டாவது நடைமேடையில் நிறுத்த முடியாததால், இரண்டு நடைமேடைகளுக்கும் இடையே உள்ள மூன்றாவதாக டிராக்கில் நிறுத்தப்படுகிறது. இந்த டிராக்கில் நடைமேடை இல்லாததால் பயணிகள் ரயிலில் இருந்த இறங்கவும், ஏறவும் முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும், ரயில் வரவுக்காக ஆபத்தான நிலையில் இரண்டாவது டிராக்கின் நடுவில் நின்று காத்திருக்கின்றனர்.
சில நேரங்களில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கடந்து செல்லும் போது விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஏற்படும் நிலை உள்ளது. இந்த ரயிலை 1வது நடைமேடையில் நிறுத்த டிராக்கில் நிறுத்தினால், பயணிகளுக்கு வசதியாக இருக்கும். இல்லையென்றால் சரக்கு ரயில் பெட்டிகளை வேறு டிராக்கில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக இருப்பதால், 3வது டிராக்கில் நிற்கும் ரயிலில் ஏற முதியோர், ஊனமுற்றோர் என அனைவரும் அவதிப்படுகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட ரயில்வே துறை உயர் அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

