/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசின் முயற்சியால் திருநங்கைகள் பல துறைகளில் சாதிக்கின்றனர் அமைச்சர் பொன்முடி பெருமிதம்

ADDED : ஏப் 23, 2024 06:41 AM
விழுப்புரம், : திருநங்கைகள் சாதிப்பதை பார்த்து மற்றவர்களும் கற்றுக் கொள்ள வேண்டும் என அமைச்சர் பொன்முடி கூறினார்.
விழுப்புரத்தில் நடந்த கூவாகம் திருவிழாவில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி பேசியதாவது:
கருணாநிதிக்கு கலை மீது அதிக ஆர்வம் இருந்ததால் தான் திருநங்கை என பெயர் வைத்தார். திரு என்றால் ஆண்கள், நங்கை என்றால் பெண்கள் என அர்த்தம்.
இவர்கள் இரு பாலருமாக இருப்பதால் தான் திருநங்கை என பெயர் சூட்டினார்.
திருநங்கைகளுக்காக தமிழக அரசு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அரசு எடுத்துள்ள பல முயற்சிகளால் தற்போது திருநங்கைகள் அனைத்து துறைகளிலும் சாதிக்கின்றனர்.
குறிப்பாக, கல்வித்துறையில் அதிகளவில் சிறந்து விளங்குகின்றனர். அது மட்டுமின்றி, தமிழ் கலாசார உணர்வுகளோடும், திறம்பட செயல்பட்டு வருகின்றனர். சென்னை பல்கலையில் திருநங்கைகள் கல்வி கற்கும் வகையில் இட ஒதுக்கீட்டை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
அண்ணா பல்கலையிலும் கல்வி கற்க இட ஒதுக்கீடு கேட்டுள்ளனர். அதையும் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றித் தருவார்.
திருநங்கைகள் இயல், இசை, நாடகம் என பலவற்றிலும் சிறந்து விளங்குகின்றனர். இவர்களைப் பார்த்து மற்றவர்களும் கற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு பொன்முடி பேசினார்.