/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வி.சி., வேட்பாளரை ஆதரித்து லட்சுமணன் எம்.எல்.ஏ., பிரசாரம்
/
வி.சி., வேட்பாளரை ஆதரித்து லட்சுமணன் எம்.எல்.ஏ., பிரசாரம்
வி.சி., வேட்பாளரை ஆதரித்து லட்சுமணன் எம்.எல்.ஏ., பிரசாரம்
வி.சி., வேட்பாளரை ஆதரித்து லட்சுமணன் எம்.எல்.ஏ., பிரசாரம்
ADDED : ஏப் 11, 2024 04:43 AM

விழுப்புரம்: விழுப்புரம் லோக்சபா தொகுதி வி.சி.க., வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து, லட்சுமணன் எம்.எல்.ஏ., ஓட்டு சேகரித்தார்.
காணை ஒன்றியம், பெரும்பாக்கம், கோனுார், கொத்தமங்கலம், வெண்மணியாத்துார், லட்சுமிபுரம், தெளி ஆகிய கிராமங்களில், தி.மு.க., மாநில மருத்துவரணி இணை செயலாளரான லட்சுமணன் எம்.எல்.ஏ., பிரசாரம் செய்தார். கோனுார் கிராமத்தில், பானை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு, அவர் பேசியதாவது:
தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன், கொரோனா நிவாரண நிதியாக, குடும்பத்திற்கு ரூ.4 ஆயிரம் கொடுத்தார். முதல்வர் கொண்டு வந்த காலை உணவு திட்டத்தின் மூலம் 17 லட்சம் மாணவர்களும், மகளிர் உரிமை தொகை மூலம் ஒரு கோடியே 16 லட்சம் பேரும் பயனடைந்து வருகின்றனர். இந்த நல்லாட்சி மத்தியிலும் அமைய பானை சின்னத்தில் மக்கள் ஓட்டளிக்க வேண்டும் என கூறினார்.
நிகழ்ச்சியில், தி.மு.க., ஒன்றிய செயலாளர் கல்பட்டு ராஜா, ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி, மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் தேவபூஷ்ணம் முருகன், ஊராட்சி தலைவர் சிவசங்கரன், கிளை செயலாளர்கள் முருகதாஸ், ஜெயக்கொடி, ஜெயா குமரன், மாவட்ட பிரதிநிதி செல்வம், விவசாய அணி துணை அமைப்பாளர் சுந்தரமூர்த்தி, முன்னாள் ஊராட்சி தலைவர் சந்திரசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

