sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

எதுவுமே செய்யாத ஆரணி தொகுதியில் வாய் திறந்து வாக்குறுதி கொடுத்தால் வம்பு எதிர்கட்சிகளை சாடியே ஓட்டு கேட்கும் வேட்பாளர்கள்

/

எதுவுமே செய்யாத ஆரணி தொகுதியில் வாய் திறந்து வாக்குறுதி கொடுத்தால் வம்பு எதிர்கட்சிகளை சாடியே ஓட்டு கேட்கும் வேட்பாளர்கள்

எதுவுமே செய்யாத ஆரணி தொகுதியில் வாய் திறந்து வாக்குறுதி கொடுத்தால் வம்பு எதிர்கட்சிகளை சாடியே ஓட்டு கேட்கும் வேட்பாளர்கள்

எதுவுமே செய்யாத ஆரணி தொகுதியில் வாய் திறந்து வாக்குறுதி கொடுத்தால் வம்பு எதிர்கட்சிகளை சாடியே ஓட்டு கேட்கும் வேட்பாளர்கள்


ADDED : ஏப் 08, 2024 06:17 AM

Google News

ADDED : ஏப் 08, 2024 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆரணி தொகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் எந்த ஒரு தேர்தல் வாக்குறுதியும் தராமல் ஓட்டு கேட்டு வருகின்றனர்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், தான் வெற்றி பெற்றால் தொகுதியின் வளர்ச்சிக்காக அரசிடம் என்னென்ன திட்டங்களை கேட்டு நிறைவேற்றுவேன் என தேர்தல் வாக்குறுதியாக அறிவிப்பார்கள்.

இந்த வாக்குறுதியை ஓட்டு கேட்டு போகும் இடங்களில் பொது மக்கள் மத்தியில் சொல்லி ஓட்டு கேட்பது தேர்தல் மரபாக இருந்து வருகிறது.

ஆனால், ஆரணி தொகுதியில் தி.மு.க., தரணிவேந்தன், அ.தி.மு.க., கஜேந்திரன், பா.ம.க., கணேஷ்குமார் போட்டியிடுகின்றனர். இந்த மூவருக்குமிடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

இந்த தொகுதியில் ஓட்டு கேட்கும் வேட்பாளர்கள், கடந்த தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருப்பது குறித்தும், செய்யப்போகும் பணிகள் குறித்தும் வாக்குறுதி அளித்து பேசுவதில்லை.

ஆரணி தொகுதியில் நீண்ட நாள் கோரிக்கையாகவும், நிறைவேற்றாமலும் நிறைய திட்டங்கள் உள்ளன.

குறிப்பாக 2008ம் ஆண்டு துவங்கப்பட்ட திண்டிவனம் - திருவண்ணாமலை புதிய ரயில் பாதை திட்டம் 16 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் 10 சதவீதம் பணிகள் கூட முடியாமல் உள்ளது.

செஞ்சி கோட்டையில் படகு சவாரியும், மலைகளுக்கு இடையே ரோப் கார் திட்டமும் கிடப்பில் இருக்கிறது.

சர்வதேச சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் செஞ்சி கோட்டையில் போதிய அடிப்படை வசதிகள் கூட இல்லை. இதுவரை சுற்றுலா ஸ்தலமாக மத்திய மாநில அரசுகள் அறிவிக்கவில்லை.

ஏழை விவசாயிகள் நிறைந்த இந்த பகுதியில் வேளாண்மை கல்லுாரி துவங்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.

நந்தன் கால்வாய்க்கு சாத்தனுார் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வர வேண்டும் என்ற திட்டத்திற்கும் நிதி ஒதுக்க வில்லை.

இதே போல் திண்டிவனம் - திருவண்ணாமலை சாலையை நான்கு வழி சாலையாக விரிவு படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும், ஆரணியில் பட்டு பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் உள்ளன.

இவை மட்டுமின்றி மேலும் பல வாக்குறுதிகள் கடந்த தேர்தலில் எல்லா வேட்பாளர்களும் அறிவித்தவை.

தி.மு.க., கூட்டணியில் வெற்றி பெற்ற காங்., வேட்பாளர் விஷ்ணுபிரசாத் இதில் ஒன்றைக் கூட நிறைவேற்ற வில்லை. தி.மு.க.,வின் எம்.பி.க்களும் மாநில அரசின் வளர்ச்சிக்காக இந்த திட்டங்கள் வேண்டும் என மத்திய அரசிடம் கேட்கவில்லை.

கடந்த 2008ல் பா.ம.க., தலைவர் அன்புமணி துவங்கிய ரயில்வே திட்டம் நிறைவேற்ற பா.ம.க., தரப்பிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த திட்டங்களை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மீண்டும் ஓட்டு கேட்டு வருகின்றனர்.

ஓட்டு கேட்டு செல்லும் இடங்களில் இந்த வாக்குறுதிகள் குறித்து வாய்திறந்தால் மக்களின் எதிர்ப்பை சந்திக்க வேண்டிவரும் என்பதால் இது குறித்து வாய்திறக்காமல் எதிர்கட்சிகளை சாடி பேசி ஓட்டு கேட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us