/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
யாரு கேட்டாங்கன்னு தெரியலையே பொட்டல்வெளியில் சிமென்ட் சாலை கடமை உணர்வுக்கு அளவில்லாமல் போச்சே...

ADDED : ஜூலை 30, 2024 06:13 AM

மரக்காணம்: மரக்காணம் பேரூராட்சியில் வீடுகளே இல்லாத பொட்டல்வெளியில் சிமென்ட் சாலை போடப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் செய்ய முடிவு செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் உள்ள தெருக்களில் சாலை, குடிநீர், மின்விளக்குகள் போன்ற பணிகள் இன்னும் முழுமை பெறாமல் உள்ளது.
இந்நிலையில் மரக்காணம் அடுத்த கோணவாயன் குப்பத்திலிருந்து எக்கியர்குப்பத்தை நோக்கி விவசாய நிலங்களுக்கு செல்லும் வண்டிப்பாதையில் மூன்று கி.மீ., துாரத்திற்கு மேல் சிமென்ட் சாலை போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வீடுகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் சாலை அமைப்பதாலும், சாலைப் பணிக்காக சாலை ஓரத்தில் இருந்த பனை மரங்கள் அகற்றப்பட்டதாலும், கோணவாயன்குப்பம் மற்றும் மரக்காணம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
எக்கியார்குப்பம் கடற்கரை அருகே தொழிலதிபர் ஒருவர் சுமார் 200 ஏக்கருக்கு மேல் நிலங்களை வாங்கி போட்டுள்ளார்.
அவருக்கு சாலை வசதி ஏற்படுத்தி தரவே இந்த பணியை பேரூராட்சி நிர்வாகம் செய்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் கூறி வருகின்றனர்.
வீடுகள் இருக்கும் தெருக்களில் சாலை வசதி ஏற்படுத்தி தராமல், பொட்டல்வெளியில் சிமென்ட் சாலை போடுவது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இல்லையென்றால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்.